Categories
டெக்னாலஜி பல்சுவை

“பிறந்த தேதியை கொடுத்தா தா செயலியை பயன்படுத்த முடியும்”….. அதிரடி காட்டும் இன்ஸ்டாகிராம்…..!!!

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இன்ஸ்டாகிராம் சேவையில் அனைவரிடத்திலும் பிறந்த தேதியை பதிவிடும் படி அந்நிறுவனம் வலியுறுத்தி வருகின்றது.

இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு வலியுறுத்தி வருகின்றது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இதனைச் செயல்படுத்துவதற்கு தொடங்கியுள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராம் முடிவுசெய்துள்ளது.

பிறந்த தேதி விவரங்களை கொண்டு ஒருவருடைய வயதுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்கவும் இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த இன்ஸ்டாகிராம் தரவுகளை பார்க்க முயற்சிக்கும் பொழுது இடையில் பிறந்த தேதி விவரங்களை பதிவிட வலியுறுத்துகிறது. இந்த ஆப்ஷனை நிராகரித்துவிட்டு செயலியை பயன்படுத்தும் வசதி வழங்க வில்லை. எனவே கட்டாயம் பிறந்த தேதி வழங்க வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் சமுதாயத்தினரை பாதுகாக்க முடியும். உங்கள் பிறந்த தேதியை வைத்து கொண்டு விளம்பரங்கள் உட்பட உங்களின் அனுபவத்தை மேம்படுத்த முடியும். இது உங்களின் பொது ப்ரோபைலின் அங்கமாக இருக்காது என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |