அர்ஜென்டினா கார்டோபாவில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 8 குழந்தைகள் பிறந்தன. ஆரோக்கியமாக பிறந்த இந்த குழந்தைகள் அடுத்தடுத்து சில நாட்களில் உயிரிழந்தன.கடைசியாக இருந்த குழந்தையின் பாட்டிக்கு திடீரென சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த உயிரிழந்த குழந்தையின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.அந்தக் குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டதால்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை நர்ஸ் பிரெண்டா அகுலெராவை போலீசார் கைது செய்தனர். ஆரோக்கியமாக பிறந்த குழந்தையை அவர் ஏன் விஷ ஊசி போட்டு கொலை செய்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.