ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், குழந்தையின் வயிற்றில் கருவின் அளவு 3 cm முதல் 5 சென்டிமீட்டர் வரை இருந்தது. முதலில் குழந்தையின் அடிவயிற்றில் நீர் கட்டிகள் இருப்பதாகத்தான் கண்டறியப்பட்டது. எனவே இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு பெற்றோருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
எனவே குழந்தை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டிகள் அகற்றப்பட்டது. பின்னர் தான் தெரியவந்தது குழந்தையின் அடிவயிற்றில் இருக்கும் நீர்க்கட்டி பகுதிக்குள் எட்டு கருக்கள் இருந்தது. இது மருத்துவ அடிப்படையில் FIF என்று அழைக்கப்படுகிறது. அதாவது இது தவறான முதுகெலும்பு கரு. எட்டு கருக்கள் குறித்த வழக்கு இதுவரை எங்கு பதிவாகவில்லை. இது மிகவும் அரிதானது. 5 லட்சத்தில் ஒருவருக்கு தான் இவ்வாறு ஏற்படும் என்று கூறியுள்ளார். தற்போது குழந்தை சீராக இருப்பதாகவும் ஒரு வாரத்தில் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.