Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிறந்து கொஞ்சம் நேரம் தான் இருக்கும்…” சாக்கில் கட்டி தூக்கி வீசப்பட்ட அவலம்”… அதிர்ச்சி தரும் சம்பவம்..!!

திருச்சி விமான நிலையம் அருகே பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போதைய காலகட்டத்தில் குழந்தையை பெற்று சிலர் குப்பையில் வீசி செல்லும் அவலம் நிகழ்ந்து வருகின்றது. தேவையற்ற உறவுகள் காரணமாகவும், பெண் குழந்தை என்ற மற்றொரு காரணமாகவும்பெற்ற குழந்தையை ஈவு,இரக்கமின்றி குப்பைத் தொட்டிகளிலும், முட்புதர்களிலும் வீசி சொல்கின்றன. தமிழகத்தில் தற்போது இதுபோன்ற சம்பவம் அதிகரித்து வருகிறது.

திருச்சி விமான நிலையம் அருகே பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆள பெண் குழந்தையை சாக்கில் கட்டி வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் குழந்தையை வீசி சென்ற பெண் யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |