இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ” இன்று பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நல்ல முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வாய்ந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தங்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை அன்போடு கூறிக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.