ஆற்காடு அருகே கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மூன்றாவது தெருவை சேர்ந்த கவிதா என்பவருக்கு 16 வயதில் அபிராமி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். சிறுமி அபிராமி ஆற்காடு தோப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபிராமி கடந்த 18ஆம் தேதி பிறந்தநாள் விழாவிற்காக கேக் வாங்கி சாப்பிட்டார். அதன்பிறகு வயிற்றுவலிக்கிறது என அபிராமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கவிதா சோடா வாங்கி அவருக்கு கொடுத்துள்ளார்.
சோடாவை குடித்து விட்டு உறங்கி அபிராமி நேற்று காலை வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஆற்காடு இன்ஸ்பெக்டர் சரவணன் அபிராமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அபிராமி ஃபுட் பாய்சன் ஆகியதால் இறந்தாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவர் சாப்பிட்ட கேக்கினால் உயிர் இறந்தாரா? அல்லது சோடாவை சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.