Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிறந்தநாளை காஷ்மீரில் கொண்டாடிய சமந்தா”… இணையத்தில் வைரலாகும் பிக்ஸ்…!!!!

காஷ்மீரில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். டோலிவுட், பாலிவுட் என நடித்து வந்த சமந்தா தற்போது ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கின்றார். இந்த நிலையில் சமந்தா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை இணையத்தில் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீரில் பிறந்த நாளை கொண்டாடிய சமந்தாவின் போட்டோ வெளியாகி இருக்கின்றது. சமந்தா காஷ்மீரில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இப்புகைப்படங்களானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |