Categories
தேசிய செய்திகள்

பிறந்தது முதல் திருமணம் வரை பணம்…. பெண் குழந்தைகளுக்கான…. மத்திய அரசின் கலக்கல் திட்டம்…!!!

மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டம் பாலிகா சம்ரிதி யோஜனா. இந்த திட்டம் மத்திய அரசு வரையறுத்துள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை பள்ளி படிப்பில் ஈடுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை தடுக்கவும் இந்த திட்டம் பயன்படுகிறது.

இந்த திட்டத்தில் உள்ளவர்கள் பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ரூ.500, 10ம் வகுப்பு படிக்கும் வரை ரூ.300 முதல் ரூ.1000 வரை வழங்கப்படுகிறது. 18 வயதிற்கு பிறகு திருமணம் அல்லது கல்விக்கான உதவித்தொகையையும் இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும். இந்த திட்டம் மாநில அரசின் துணையுடன் அமல்படுத்தப்படுகிறது.

Categories

Tech |