Categories
உலக செய்திகள்

பிரேசிலை உருமாற்றம் அடைந்த கொரோனா.. ஜெர்மனியை உலுக்கி வருகிறது.. நிபுணர்கள் எச்சரிக்கை..!!

பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது ஜெர்மனியில் வெகு தீவிரமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலகிலுள்ள சுமார் 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிபுணர்கள், மிக வேகமாக பாதிப்பை உண்டாக்கும் பிரேசிலில்  கண்டறியப்பட்ட கொரோனா அபாயமானது என்று எச்சரித்துள்ளனர். மேலும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கொரோனாவானது, உருமாற்றம் அடைந்த கொரோனாவை விட சுமார் 1.4 லிலிருந்து 2.2 மடங்கு அதிகமாக பரப்பக்கூடியது என்று தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு பிரேசில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இதனால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த பிரேசில் தொற்றானது கடந்த ஜனவரி மாதம் ஹாம்பர்க் பகுதியில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைமுறையில் தடுப்பூசிகள் இந்த பிரேசில் தொற்றை எதிர்த்து செயல்படுமா? என்று உறுதியான தகவல்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |