Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிக்காததால் வாக்குவாதம்…. அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய அதிகாரி…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள சேலாஸ் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆனந்தன் ஊட்டி-அச்சனக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி சென்றுள்ளார். கண்டக்டராக குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை. இதனால் ஆனந்தன் மீண்டும் பேருந்தை பணிமனைக்கு கொண்டு சென்று பழுது நீக்கி தருமாறு கூறியுள்ளார்.

இதனை அடுத்து பழுது நீக்கப்பட்ட பேருந்தை ஆனந்தன் மீண்டும் ஊட்டி சென்றபோது பிரேக் பிடிக்காதது போல தெரிந்தது. இதனால் ஆனந்தன் மீண்டும் பணிமனைக்கு பேருந்தை ஓட்டி சென்று பழுதை நீக்குமாறு கூறியதால் உதவி இன்ஜினியராக வேலை பார்க்கும் மணிகண்டனுக்கும், ஆனந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மணிகண்டன் ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது ஊட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |