பிரெஞ்ச் பிரைஸ் சூடாக தரவில்லை என்று கூறி மெக்டொனால்டு ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
McDonald’s ஊழியர் ஒருவர் வாடிக்கையாருக்கு குளிர்ச்சியான பிரெஞ்ச் பிரைஸை வழங்கியதாக குற்றம் சாட்டி அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். நியூயார்க்கில் உள்ள மெக்டொனால்டு விற்பனை நிலையத்தின் ஊழியரான மேத்யூ வெபி என்பவரின் கழுத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
பலத்த காயங்களுடன் புரூக்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்குப் பிறகு, மைக்கேல் மோர்கன் என்ற குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.