கர்நாடகாவில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்று எழுந்த எதிர்ப்பு தற்போது அடுத்த கட்டங்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “முதல்வர் பசவராஜ் பொம்மை சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும், அனைத்து மக்களும் சமம் என்றும் கூறியுள்ளார். எப்போது முதல்வரை சந்தித்தாலும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே அறிவுறுத்துவேன்.
முஸ்லிம்களும், இந்துக்களும் ஒரு தாய்க்கு பிறந்த சகோதரர்கள். முஸ்லிம்களும், இந்துக்களும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்த சில குண்டர்கள் முயற்சி செய்கின்றனர். இஸ்லாம்-இந்து பிணைப்பை உடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மக்கள் நிம்மதியாக வாழவும், சட்ட ஒழுங்கு சீர்குலைவதை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.