Categories
உலக செய்திகள்

பிரியாணி விலை 20,000 ரூபாயா..? “அப்படி என்ன இருக்கு இதுல”..? பர்சை பதம் பார்க்கும் இந்த பிரியாணி எங்கு இருக்கு..!!

அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காதவர் என்பவர்கள் இருக்கவே முடியாது. ஊரடங்கு காலத்தில் கூட அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளில் முதலிடத்தில் பிடித்தது பிரியாணி. பிரியாணியில் பல வகைகள் உள்ளது. அதன் விலை மற்றும் அலங்காரம் மிகவும் தனித்துவமானது. உலகிலேயே மிக உயர்ந்த பிரியாணி எது தெரியுமா? அதன் விலை எவ்வளவு தெரியுமா? அது குறித்து இதில் பார்ப்போம்.

துபாயில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் கோல்ட் ராயல் பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரியாணி பாம்பே போரா உணவகம் தயாரிக்கின்றது. இந்த பிரியாணியின் விலையை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு தட்டு பிரியாணியின் விலை 20,000 ரூபாய் ஆகும். அப்படி என்ன இதில் சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? 23 கேரட் தங்கத்தால் இது அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த பிரியாணிக்கு ராயல் கோல்ட் பிரியாணி என்று பெயர்.

இதன் இந்த பிரியாணிஉடன்  காஷ்மீர் மட்டன் கபாப், பழைய டெல்லி மட்டன் சாப்ஸ், ராஜ்புத் சிக்கன் கபாப், முகலாய கோட்பா மற்றும் மலாய் சிக்கன் ஆகியவை இந்த ராயல் கோல்ட் பிரியாணியில் அடங்கும். பிரியாணியுடன் ரைத்தா கறி மற்றும் சாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த பிரியாணி ஆர்டர் செய்த 45 நிமிடங்களுக்குள் வழங்கப்படும். 20 ஆயிரம் ரூபாய் தங்கம் நிறைந்த இந்த பிரியாணியை நீங்கள் தனியாக சாப்பிட வேண்டியதில்லை. இதனை ஆறு நபர்களிடம் பகிர்ந்து கொள்ள உணவகம் வாய்ப்பளிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட இந்த பிரியாணி அதன் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சிறப்பு பிரியாணியை தனது மெனுவில் சேர்த்துள்ளது.

Categories

Tech |