ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவப் பிரியர்கள் கறி வாங்க காத்துக் கிடப்பது போல் கர்நாடகாவில் உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்க அதிகாலை முதலே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்த சம்பவம் அரங்கேறியது.
கர்நாடக மாநிலம் ஓஸ்கோட் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரியாணி கடை அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. சுமார் 22 ஆண்டுகளாக செயல்படும் இந்த கடையில் பிரியாணி அதிக சுவையுடன் இருப்பதால் அதற்குகேன்று மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கடையில் விற்பனை மிக அதிகமாக இருக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகாலை 4 மணி முதல் இந்த நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கி செல்கின்றனர்.
இன்று காலை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்க்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாளொன்றுக்கு 1000 கிலோ அதிகமான பிரியாணியை தாங்கள் விற்பனை செய்வதாக அக்கடையின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.