பிரியாணி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் பிரியாணி என்பது மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியாணி மிகப் பிடிக்கும். பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீப் பிரியாணி என வெவ்வேறு வகை பிரியாணிகள் உள்ளது. ஆனால் சாக்லேட் பிரியாணி என்ற எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஒரு உணவகத்தில் சாக்லேட் பிரியாணி விற்கப்படுகின்றது. இதுகுறித்து பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப்பில் ஒருவர் பதிவேற்றிய காணொளியில் சாக்லேட் பிரியாணியை புகழ்ந்து பேசியிருப்பார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் கொந்தளித்து கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர்.