ஹோட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் ஒரு பிரியாணி கடை அமைந்துள்ளது. இந்த கடையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான்(50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடைக்கு வந்த ஒருவர் 90 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். அதற்கு முகமது உஸ்மான் பிரியாணி பார்சல் 100 ரூபாய் எனவும், 90 ரூபாய்க்கு தர முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த நபரை முகமது கடையை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது உஸ்மானை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முகமது உஸ்மானை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்தி விசாரணையில் அந்த நபர் பெரியமேடு முதல் தெருவில் வசிக்கும் விக்னேஷ்(27) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பெரியமேடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.