காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யகோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே பிரியங்கா காந்தியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் மாவட்ட தலைவர்களான பாச்சல் சீனிவாசன், ஜி.ஆர். சுப்பிரமணியம், வி.பி. வீரப்பன், வட்டார தலைவர்கள் ரங்கசாமி, இளங்கோ, ஜெகநாதன், தங்கராஜ், இருசப்பன், குப்புசாமி, நகர தலைவர்கள் முரளி, மோகன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.