Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரியங்கா காந்தி கைது… உத்திரபிரதேச ஆட்சியை கண்டித்து… கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கட்சியினர் உத்திரபிரதேச அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் சந்திரன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜோதி நிவாஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன்,வட்டார தலைவர் இருக்கன்குடி சுப்பையா மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவி எலிசா உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்பட்டத்திற்கான ஏற்பாடுகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் செய்துள்ளார்.

Categories

Tech |