Categories
உலக செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ…. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!!

பிரித்தானியா ராஜ குடும்பத்தின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய மகாராணியான ராணி இரண்டாம் எலிசபெத்  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் இறந்தார். இந்த நிலையில் பிரத்தானிய ராஜ குடும்பத்தில் அதிக சொத்துக்கள் கொண்டவராக இளவரசர் வில்லியம்ஸ் திகழ்கிறார். தற்போது இளவரசர் என புதிய பட்டம் பெற்றுள்ள இவருடைய   சொத்து  மதிப்பு 1.05 மில்லியன் பவுண்டுகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் மூன்றாம் சார்லஸின்  சொத்து மதிப்பு 900 மில்லியன் பவுண்டுகள். ஆனால்  இவர்கள் 2  இருவரையும் விட எட்டாத தொலைவில் இருக்கிறார் இளவரசர் ஹரி. ஹரி மற்றும் மோகன் தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு 20 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே என தெரியவந்துள்ளது.

ஆனால் மன்னர் சாலரின் சகோதரியான இளவரசிய ஆன் சொத்து மதிப்பு 50 மில்லியன் பவுண்டுகள் எனவும், இளவரசர் எட்வார்ட் மற்றும் சோஃபி தம்பதிக்கு 10 மில்லியன் பவுண்டுகள் சொத்து இருப்பதாகவும கூறப்படுகிறது. மேலும் இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்து மதிப்பு 5 மில்லியன் பவுண்டுகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ராஜக் குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான தகவலில் ராஜ குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 9 மில்லியன் பவுண்டுகள் என கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தகவலில் ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 18.3 மில்லியன் பவுண்டுகள் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பல்பொருள் அங்காடி குழுமமான  டெஸ்கோவின் மொத்த பங்கு சந்தை மதிப்பு 17 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே.

ஆனால் ராணியார் மறைவுக்கு பின்னர் சார்லஸ் வசம் இருந்த 685 ஆண்டுகள் பழமையான கார்ன்வால் எஸ்டேட் இளவரசர் வில்லியம் கைவசம் வந்துள்ளது. இதனால் தற்போது வேல்ஸ் இளவரசர் என பட்டம் பெற்றுள்ள வில்லியம் பில்லியனர் அந்தஸ்த்துக்கு உயர்ந்தார். மேலும் இளவரசி டயானா மறைவுக்கு பின்னர் அவரது சொத்தில் 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் வில்லியம் வசமானது. கடந்த 2002-ஆம் ஆண்டில் ராணியாரின் தாயார் இறந்த பின்னர் 7 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் இளவரசர் வில்லியம் பேரில் மாற்றப்பட்டது. தற்போது இளவரசர் சார்லஸ் மன்னராக முடி சூடும் நிலையில் 671 ஆண்டுகள் பழமையான லாங்காஸ்டர் எஸ்டேட் அவர் வசமாகியுள்ளது. இதன் மதிப்பு 652.8 மில்லியன் பவுண்டுகள் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |