Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவை விட்டால் உதவி செய்ய யாருமில்லை….. பணிந்த பிரான்ஸ் ஜனாதிபதி….!!

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே மீன்பிடி உரிமத்தில் மோதல்கள் இருந்து வந்த நிலையில் இருவரும் மாறி மாறி பழிவாங்கப் போவதாக மிரட்டி கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்த போரை நிறுத்த விரும்புவதாகக் பிரான்ஸ் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானியாவின் ஆதரவு எங்களுக்கு தேவை என்பதை பிரான்ஸ் தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் ஆதரவு இல்லாத நிலையில் பிரித்தானியா போன்ற மற்றொரு வலிமையான நாட்டின் ராணுவத் தின் ஆதரவு பிரான்சுக்கு மட்டுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் தேவை என்று பிரான்ஸ் புரிந்து கொண்டது. எனவே நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது இத்தாலி ஸ்பெயின் அல்லது ஜெர்மனி சார்ந்திருக்க முடியாது.

அதனால் பிரித்தானியா இல்லாமல் ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு குறித்தும் பேச முடியாது என ஜனாதிபதி அறிந்திருக்கிறார் என்று பிரான்ஸ் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏதாவது ஒரு நாடு பிரான்சுடன் போருக்கு வருமானால் உதவிக்கு பிரான்ஸ் பிரித்தானியாவை அழைக்க வேண்டும். எனவே மீன்பிடி உரிமை போன்ற சின்ன விஷயங்களை சண்டை போட்டு ஐரோப்பா பாதுகாப்பு போன்ற பெரிய விஷயங்களை இழக்க விரும்பவில்லை என்றும் பிரான்ஸ் பணிவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |