பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணி விமானங்கள் விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது .
பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணியின் விமானங்கள் அடுத்த ஆண்டு விற்கப்படும் என்று எந்த ஒரு ஆதாரங்களும் மேற்கோள் காட்டாமல்’ டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ராயல் விமானப்படை பணத்தை மிச்சப்படுத்தவும்,4 BAE -146 விமானங்களை விற்கப் போவதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இளவரசர் மற்றும் அரச உறுப்பினர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் RAF voyager விமானத்தை பயணத்திற்காக பயன்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது .
பொது பாதுகாப்பு குழுவின் தலைவரான டோபியாஸ் எல்வுட் கூறுகையில், BAE146 என்பது மிகவும் மதிப்புமிக்க விமானம் ஆகும் .அது ராணுவ தளபதிகள், பிரதமர்கள், அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தனித்துவம் வாய்ந்த சேவைகளை வழங்கும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சி உறுப்பினரான கரெத் தாமஸ் கூறுகையில் ,அரச குடும்பங்கள் முக்கியமான பயணங்கள் மேற்கொள்ள என்ன செய்வார்கள்? என்பதை அமைச்சர்கள் அவசரமாக விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சகம், வி.ஐ.பிகள் மற்றும் தளபதிகளுக்கு தகுந்த விமான போக்குவரத்தை நாங்கள் வழங்குவோம் என்றும் ,எந்த ஒரு முடிவாக இருந்தாலும் பின்வாங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது.