பிரிட்டன் மகாராணியாரின் கொள்ளுப்பேரன் பிறப்பில் ஒரு சுவாரசியமான பின்னணி அமைந்துள்ளது.
மறைந்த பிரித்தானிய மகாராணியர் இரண்டாம் எலிசபத்திற்கு 12 கொள்ளு பேரன்களும், பேத்திகளும் இருக்கின்றார்கள். இவர்களில் இளவரசர் வில்லியம் ஹரியின் பிள்ளைகளைத் தவிர அவர்களில் பெரும்பாலானோர் அதிகமாக வெளி உலகத்திற்கு தெரிவதில்லை. மேலும் அவர்களின் ஒருவர் லூகாஸ் மிகவும் க்யூட்டான லூக்காஸுக்கு அவரது கொள்ளு தாத்தாவான பிலிப்பை கௌரவிக்கும் விதமாக Lucas Philip tindall பெயரிடப்பட்டிருக்கிறது. மகாராணியாரின் மகளான இளவரசி ஆணுடைய மகளான சாரா ட்விட்டரின் மகன்தான் இந்த லூகாஸ். இந்த நிலையில் லூகாஸின் பிறப்பில் மறக்க முடியாத ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது.
அது என்னவென்றால் சாரா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத காரணத்தினால் வீட்டின் குளியல் அறையில் லூகாஸை பிரசவித்துள்ள சாரா. இந்த லூகாஸ் மறைந்த மகாராணியரின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களின் போது தான் முதன்முறையாக வெளி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் லூக்காஸ் தனது தந்தை மைக் டிண்டல் தாய் சாரா டிண்டல் போன்றவருடன் வேடிக்கையாக நடனமாடும் காட்சி அப்போது பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.