Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு இழைக்கப்பட்ட துரோகம் – இளவரசர் ஹரி -மேகன் பேட்டி குறித்து விமர்சனம் …!!

பிரிட்டிஷ்  ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன், இளவரசர் ஹரி -மேகனின் தொலைக்காட்சி நேர்காணல்  மகாராணிக்கும் ,அரச குடும்பத்திற்கும் அவர்கள் இழைத்த துரோகம் என்று விமர்சித்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்ப பதவியிலிருந்து விலகிய ஒரு வருடத்திற்கு பின்பு ஓபரா வின்பிரே உடனான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று பேட்டி அளித்தனர். அதில் தங்கள் இருவருக்கும் அரசு குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தனர். இதுகுறித்து பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில், இந்த பேட்டி மஹாராணி மற்றும் அரச குடும்பத்திற்கு இழைக்கப்படும்  துரோகம் என்று கூறியுள்ளார்.

மகாராணியையும் அவர்களின் குடும்பத்தையும் இதுபோன்ற ஹரி-மேகன் தம்பதியர் அசிங்கப்படுத்துவது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரி முன்பே மேகன்  இவ்வாறு குடும்பத்தை அசிங்கப்படுத்துவதை ஹரி அனுமதிப்பது தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராணியின் 99 வயதான கணவர் பிலிப்ஸ் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் இவ்வாறு இவர்கள் இரண்டு பேரும் பேட்டி அளித்தது இழிவானது என்றும் பியர்ஸ் மோர்கன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |