Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அமைச்சர்… கொரோனாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள… முக்கிய நடவடிக்கைகள் வெளியீடு…!!

பிரிட்டன் அமைச்சர் கொரோனாவிற்கான மூன்றாம் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரிட்டனின் மூன்றாவது ஊரடங்கு மிகக் கடுமையானது மேலும் உருமாறிய புதிய கொரோனா வைரசானது சமூகத் தொடர்புகள் மூலமாகத்தான் எளிதில் பரவுகிறது. ஆகவே, மற்றவர்களுடன் பழகுவது தான் மக்கள் செய்வதில் மிக மோசமான செயல் என்று Nadhim Zahawi கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்தல் அல்லது தேவையுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மற்றபடி வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் முகக்கவசம் அணிந்து தான் மக்கள் அனைவரும் வருகிறார்களா? மற்றும் கொரோனா வழிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா? என்பது குறித்தும் அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. மேலும் அரசு எந்தவிதமான கடினமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள விரும்பவில்லை, எனவும் மக்கள்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகளை போட்டு வைரஸை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும்.

மேலும் இந்த விதிமுறைகள் மக்களுக்கு எதிரானதாக திணிக்கபடவில்லை. இவைகள் வைரஸை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக செய்யப்படுபவை தான். மேலும் பிப்ரவரி மாதங்களில் கொரோனாவால் எளிதில் பாதிப்படைய கூடியவர்களுக்கு தடுப்பூசி அரசாங்கம் அளிக்கும். மேலும் இந்த வாரத்தில் ஏழு தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட இருக்கிறது. இதனால் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் பத்து மைல் தூரம் சுற்றளவில் தடுப்பூசி பெறமுடியும். இதுதான் அரசாங்கத்தின் நோக்கம். மேலும் இனிவரும் காலங்களிலும் மேலும் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |