பிரிட்டனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டன் Old Trafford செஸ்டர் சாலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் நேற்று இரவு 11.55 மணிக்கு எங்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது ஒழுங்கை மீறிய வழக்கில் 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தொடர்ந்து வெடிகுண்டை தேடிய நிலையில் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை தொடர்ந்து காவல்துறை பணியாற்றி வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.