பிரிட்டனில் ஒன்றரை மில்லியன் அதிகமாக ஐரோப்பிய ஒன்றியம் குடி மக்கள் வாழ்வதாக பிரிட்டன் உள்துறை அலுவலகம் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது .
பிரிட்டன் அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தீர்வுத்திட்டத்தின் கீழ் பிரிக்ஸிட்க்கு பிறக பிரிட்டனில் தங்குவதற்காக 4.6 மில்லியன் மக்கள் உரிமை பெற்றதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது. சுமார் 5 மில்லியன் விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 31,2020 நிலவரப்படி பெறப்பட்டது. அதில் இங்கிலாந்தில் 90% ,ஸ்காட்லாந்தில் 5% ,வேல்ஸில் 2% மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2% என்று உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இதில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை போலந்து ,ருமேனியா மற்றும் இத்தாலி நாட்டவர்களிடமிருந்து பிரிட்டனில் வாழ்வதற்காக பெறப்பட்டன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரிக்ஸிட்க்கு முன்பு பிரிட்டனில் 3.1 மில்லியன் இருந்தது குறிப்பிடத்தக்கது.