பிரிட்டனில் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிளக்கம் படிவத்தை கொண்டு வரவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் சுய விளக்க படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு வரவேண்டும். ஏற்கனவே மே 17 ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்யும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சை ,கல்வி மற்றும் பணி, இறுதி சடங்கு போன்ற தேவைகள் இருப்பவர்களுக்கு இந்த தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் வரும் திங்கட்கிழமை முதல் பிரிட்டனிலிருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மூன்று பக்கங்கள் அடங்கிய படிவத்தை நிரப்ப வேண்டும். படிவத்தை கொண்டு வராதவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் இந்த ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனையும் மேற்கொள்ளப்படும் அப்படி அவர்களிடம் அந்த சுயவிளக்க படிவம் இல்லையென்றால் 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேல்அவர்கள் அந்த படிவத்தில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டிருந்தால் அதற்கு அவர்களுக்கு 200 முதல் 6400 பவுண்டுகள் வரை அபராதமும் கைது செய்யவும் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.