Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் மிகவும் மோசமான நாள்… ஒரே நாளில்… உச்சத்தை தொட்ட உயிர் பலி

பிரிட்டனில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் உச்சத்தை அடைந்துள்ளதாக மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரிட்டனில் கொரோனோ பாதிப்பு ஏற்பட தொடங்கிய நாளிலிருந்து மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை ஒரே நாளில் பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 21ம் தேதியில் பதிவாகியுள்ள 1,224  என்ற எண்ணிக்கையைவிட 101 எண்ணிக்கை அதிகமானதாகும். மேலும் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1325 என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,053 என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் காப்பகங்களில் தான் இந்த இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இதோடு மட்டுமின்றி பிரிட்டனில் மூன்றாம் தேசிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எனினும் பலியானோர் எண்ணிக்கை உச்சம் அடைந்துள்ளது. மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று மட்டும் 1,172 பேர் சிகிச்சை பலனளிக்காமல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த பல நாட்களாக பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கையும் 50,000 கடந்துள்ளது.

மேலும் லண்டனில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை என்று மேயர் சாதிகான் தெரிவித்துள்ளார். மேலும் இதே நிலைமை நீடித்தால் தலைநகரில் அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார். மேலும் லண்டனில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் நபர்களுக்கு ஆயிரம் எந்த விகிதத்தையும் தாண்டியுள்ளது. மேலும் ஏற்கனவே பரிதாபமான நிலையில் இருக்கும் சுகாதாரத் துறைக்கு மேலும் இது சிக்கலை உண்டாக்குவது போன்றது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |