Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் குறைந்த கொரோனா…. உற்சாகத்தில் பிரிட்டன்… இது தான் காரணமா..??

பிரிட்டனின் தீவிர நடவடிக்கைகளினால் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் மூன்றாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டுவருவதால் கடந்த 7 நாட்களில் பிரிட்டனில் கொரோனா தொற்று 30.6 சதவீதமாக குறைந்தது என்று புள்ளி விவரங்கள் வெளியானது.

அதாவது கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 33,552 என்ற நிலையில் இருந்தது. ஆனால் இந்த வார சனிக்கிழமையில் கொரோனா பாதித்தவர்கள் 23,275 நபர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த சனிக் கிழமையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1348 ஆக இருந்துள்ளது.

ஆனால் தற்போது உயிரிழப்புகள் 1200 ஆக குறைந்துள்ளது. இதுகுறித்து, விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது, அரசின் தீவிரமான கட்டுப்பாடுகளும், விரைவான தடுப்பூசி செலுத்தும் திட்டம் போன்றவைகள் தான் தற்போது இது போன்ற நற்பலன்களை தந்துள்ளதாக கூறியுள்ளார். எனவே தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களின் உடல் மற்றும் மன நலனுக்காக உடற்பயிற்சிக்கான விதிகளில் விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |