Categories
உலக செய்திகள்

“பிரிக்ஸ்” கூட்டமைப்பில்…. பிரபல நாடு சேர விண்ணப்பம்….!!!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பு வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ள 5 நாடுகளும் பொருளாதாரம், அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒருங்கிணைத்து செயல்பட நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 14வது கூட்டம் சீனாவில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் அல்ஜீரியா, அர்ஜெண்டினா, கம்போடியா, இந்தோனேசியா, எகிப்து, எத்யோப்பியா, ஈரான், கஜகஸ்தான், மலேசியா, செனகல், தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் விருந்தினராக பங்கேற்றனர். இந்நிலையில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்கும்பட்சத்தில் இந்த கூட்டமைப்பில் 6 வது நாடாக ஈரான் இணையும். மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஈரான் இணையும் பட்சத்தில் இந்த கூட்டமைப்பில் இணையும் முதல் வளைகுடா நாடு என்ற பெருமை ஈரான் அடையும்.

Categories

Tech |