பிரான்ஸ் அதிபரின் மனைவிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபரான இம்மானுவேலின் மனைவியான Brigitte Macronக்கு கடந்த டிசம்பர் இறுதியில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதன் பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று Brigitteக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் பெரிதாக தெரியவில்லையாம்.
இதனைத்தொடர்ந்து டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தொடர்ந்து இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் 17ம் தேதி அன்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதியிலிருந்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் இல்லை என்று உறுதிசெய்யப்படும் வரை சுய தனிமையில் இருந்துள்ளார்.