சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்சிற்குள் செல்ல யாருக்கெல்லாம் அனுமதி வழங்கப்படுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயத்தில் பிரான்சில் எல்லையைத் தாண்டி வேலைக்கு செல்பவர்களுக்கு விதிவிலக்குகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
அதனை தெளிவுபடுத்த ஜெனிவாவில் இருக்கும் பிரான்ஸின் தூதரக அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் தொடங்கி 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக வாழும் சுவிஸ் குடிமக்கள் பிரான்சிற்குள் செல்ல கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மேலும் அதே சமயத்தில் சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்சுக்கு செல்ல விரும்பும் நபர்கள் தங்கள் முகவரிக்கான சான்று மற்றும் பயணம் மேற்கொள்ளக்கூடியதற்கான காரணத்தை காட்டுவதற்கான ஆவணம் போன்றவற்றை தங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்கள், பிரான்சில் ஷாப்பிங் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் அத்தியாவசியமில்லாத பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிரான்சில் அடைக்கப்பட்டுள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் பிரான்சில் இருக்கும் மருத்துவர் அல்லது கால்நடை மருத்துவரை அணுகலாம்.