Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிராத்தனை எனக்கூறி 13 வயது சிறுமியிடம்…. மதபோதகரின் கொடூர செயல்…. பரபரப்பு…..!!!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் சூரி ஸ்டீபன் (54) என்பவர் வசித்து வருகிறார். கிறிஸ்துவ மதபோதகரான இவர் அப்பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சூரி ஸ்டீபன் தனது வீட்டுக்கு அருகில் மற்றொரு பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்தார். இதனை அறிந்து கொண்ட சூரி ஸ்டீபன், அந்த சிறுமிக்காக பிரார்த்தனை செய்வதாக கூறி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

இதையடுத்து சிறுமியின் அருகே சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி சத்தம் போட்டதால் சூரி ஸ்டீபன் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி சூரி ஸ்டீபனை ‘போக்சோ’ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சூரி ஸ்டீபன் குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |