ராட்சத பறவை ஒன்று பிரமாண்ட மீனை பிடித்து சென்றது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது:
அமெரிக்காவில் சுறா மீன் போன்ற பிரமாண்ட மீனை கழுகு போன்ற ராட்சதப் பறவை ஒன்று துடிக்கத் துடிக்க தூக்கிக்கொண்டு பறந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தவாரம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மெய்றில் பீச் பகுதியில் இருந்தவர்களுக்கு இந்த வினோத காட்சி தென்பட்டது.
அந்த பறவையின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட துடித்த மீனின் போராட்டம் பயனின்றி போனது. இந்த காட்சியை வீடியோ எடுத்து முகநூலில் வெளியிட்டவர் அந்த பறவை கழுகு அல்லது கோண்டார் எனப்படும் பிரமாண்ட பறவையாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.