Categories
சினிமா தமிழ் சினிமா

பிரமாண்டமான வாரிசு பட விழா: தளபதி மாஸ் ENTRY…. ஆரவாரத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  ஃபர்ஸ்ட் சிங்கிள்,  செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் இந்த திரைப்படத்தின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். விழா அரங்கினுள் விஜய் நுழைந்த போது ரசிகர்கள் அரங்கமே அதிரும்படி ஆராவாரம் செய்தும், செல்போன்களில் டார்ச் அடித்தும் அவரை வரவேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வைரலாகி வருகின்றன.

Categories

Tech |