Categories
சினிமா

பிரபாஸ் மீது காதலா?…. கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கிருத்தி சனோன்…..!!!!!

பாகுபலி திரைப்படம் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவருடைய திரைப்படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கின்றனர். இதன் காரணமாக அவர் சம்பளத்தை ரூபாய்.100 கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கிடையில் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக முன்னதாக தகவல் பரவியது. எனினும் காதலிப்பதை இரண்டு பேருமே உறுதிப்படுத்தவில்லை. இப்போது இந்தி நடிகையான கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புது தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணையதளங்களில் பரவி வருகிறது.

பிரபாஸ் ராமாயண கதையை மையமாக கொண்டு தயாராகும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இவற்றில் சீதை வேடத்தில் இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப் பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் கிருத்தி சனோன் பேட்டி அளித்தபோது ”பிரபாஸை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என கூறி இருந்தார். அதன்பின் கிருத்தி சனோன் வேறு ஒருவர் இதயத்தில் உள்ளார். அந்த மனிதர் தற்போது தீபிகாவுடன் படப்பிடிப்பில் இருக்கிறார் என இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தி இருந்தார்.

அதனை தொடர்ந்து இருவரது காதலும் உறுதிசெய்யப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் அதெல்லாம் பொய்யான செய்தி என கிருத்தி சனோன் தற்போது விளக்கமளித்துள்ளார். அதாவது, கிருத்தி சனோன், அது காதலும் இல்லை பப்ளிசிட்டியும் இல்லை. ஒரு வேடிக்கையான கேலிப்பேச்சு இப்படி வதந்தி வரக் காரணமாகி விட்டது. ஏதாவது ஒரு இணையதளம் என் திருமணத் தேதியை அறிவிப்பதற்கு முன் உங்களது கற்பனையை உடைத்துவிடுங்கள். வதந்திகள் அனைத்து நிச்சயம் ஆதாரம் இல்லாத ஒன்று” என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் காதல் குறித்த செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |