நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘சலார்’ திரைப்படத்தில் ராணா வில்லனாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது . இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரி குவித்து சாதனை படைத்தது . இந்நிலையில் தற்போது மீண்டும் பிரபாஸ் – ராணா இணைந்து பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
கே.ஜி.எப் படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படம் ‘சலார்’ . இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க ராணா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இந்தத் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.