பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
All done with the last schedule of #RadheShyam … I spread my love to all our darling fans !! This pandemic had a a toll on all our expectations!! An update is on the way
— Radhaa Krishna (@director_radhaa) July 28, 2021
3 days more for the official update !!! Let’s all wait 😍😍😍😍😍😍😍😍😍
— Radhaa Krishna (@director_radhaa) July 28, 2021
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் ‘ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.