நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இவர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் டி- சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகிறது. மேலும் இந்த படத்தின் முதல் பாடல் நவம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு 11 மணிக்கு ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வெளியானது. அனிமேஷன் டைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் தமிழ், தெலுங்கு மொழி பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் வெளியாகியுள்ள ‘ஆகூழிலே’ பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அழகிய பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.