நடிகர் பிரபாஸ் “ஆதி புருஷ்” திரைப்படம் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபாஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பதிவில் கூறியுள்ளதாவது இத்திரைப்படமானது அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் 3டியில் வெளியாகும். முன்னதாக இத்திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.