பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார்.
#Prabhas25 Announcement on October 7th
Prabhas 25 is definitely materialising and the Superstar will make a special announcement soon. #Prabhas pic.twitter.com/Lr6dYbayo8
— Nikil Murukan (@onlynikil) October 4, 2021
இந்நிலையில் பிரபாஸின் 25-வது படம் குறித்த அறிவிப்பு வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.