பிரபல ரெட்மி நிறுவனம் K50i 5G ஸ்மார்ட் போனுடன் 3 லைட் ட்ரு வயர்லெஸ் இயர் பட்சை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூபாய் 1999 ஆகும். இந்த இயர் பட்சை அமேசான் இந்தியா, எம்.ஐ ஸ்டோர், MI.Com போன்றவற்றிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இந்த இயர் பார்ட்ஸ் ஜூலை 31-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருப்பதால், அறிமுக சலுகையாக 48 மணி நேரத்திற்குள் வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய் 1499-க்கு வழங்கப்படும். இந்த இயர் பட்ஸ் கருப்பு நிறத்தில் ஸ்டெம்லெஸ் இன் இயர் ஸ்டைல் டிசைனுடன், 6 மில்லி மீட்டர் டைனமிக் டிரைவர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள சக்தி வாய்ந்த டைனமிக் டிரைவர்கள் ஒலி வெளியிட்டீற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இது அழைப்புகளின் போது ஏற்படும் சுற்றுப்புற இரைச்சலை குறைக்கிறது. இதனுடன் தேவையற்ற ஒலியை குறைப்பதற்காக புதிய அல்காரிதம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இயர் பட்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் உள்ள சார்ஜிங் கேஸ் 18 மணி நேரம் பிளே பேக்கை வழங்குகிறது. இதை கூடுதலாக 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 நிமிட பிளே பேக்கை பெறலாம். இதற்காக விரைவான சார்ஜிங் வசதி டைப் சி போர்டுடன் வழங்கப்பட்டுள்ளது.