சிவகங்கையை சேர்ந்த பிரபல ரவுடியான வசந்த் என்பவர் வழிபறி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஜாமினில் வெளியே வரயிருந்தார். அப்போது வசந்த் மீது மற்றொரு வழக்கில் பிடிவாரண்டி உள்ளதால் சிவகங்கை தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்ய வெளியே காத்திருந்தனர். இதையடுத்து நீண்ட நேரமாகியும் சிறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த தனிப்படை காவல்துறையினர் சிறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரவுடி முன்பே சென்றுவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த காவல்துறயினர் சிறையிலிருந்து வெளியே வர ஒரு பாதை தான் இருக்கிறது. ஆகவே இப்பாதை வழியே வெளியே வரவில்லை என்று கேட்டுள்ளனர். இந்நிலையில் விசாரணையில் சிறைவார்டன்கள் 2 பேர் சேர்ந்து அந்த ரவுடியை வேறு வழியாக தப்ப வைத்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியிலிருந்த சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி போன்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் இருவார்டன்களையும் பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.