தமிழகத்தின் முன்னாள் அமைச்சரான எஸ்.ஆர்.ராதா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
தமிழ்நாட்டின் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார். அவர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
இவர் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் உள்ளிட்டோருடன் மிக நெருக்கமான உறவில் இருந்தவர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.