பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் தனது குழுவினர், இசை குழு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாராகுவேவுக்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அசுன்சியோனிகோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். நடுவானில் விமானத்தை மின்னல் தாக்கியதால் அந்த விமானம் அவசரமாக தரை இரக்கப்பட்டு இருந்தது. அவர் இன்ஸ்டாகிராமில் மின்னல் தாக்கிய காட்சிகளை வெளியிட்டு உள்ளார்.
அதில் எங்கள் விமானம் ஒரு பெரிய எதிர்பாராத புயலில் சிக்கி மின்னலால் தாக்கப்பட்டு இருந்தது. எனது குழுவினர் இசை குழு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எங்களால் பரகுவேவுக்கு செல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.