பாடகர் பம்பா பாக்கியாவின் உடலுக்கு பிரபல இசை அமைப்பாளர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் ராவணன் படத்தில் இடம்பெற்ற கிடா கிடா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா (49). அதன்பிறகு சர்கார் படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன், எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல், பிகில் படத்தில் இடம்பெற்ற காலமே காலமே பாடல், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் பம்பா பாக்யா மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பம்பா பாக்கியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இசை புயல் ஏ.ஆர் ரகுமானும் பம்பா பாக்யாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.