பிரபல பாடகருக்கும் அவரின் மனைவிக்கும் இடையிலே ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமாக தனுஷ் உள்ளார்.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி அறிவித்தார்கள். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் பிரிந்ததற்கான காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கூறிவருகின்றனர். சில வதந்திகளும் பரவி வருகின்றது. தற்பொழுது மேலும் ஒரு வதந்தி பரவி வருகின்றது. அது என்னவென்றால் பிரபல பாடகருக்கு அவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு தனுஷ் காரணமாக உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் திரைப்படத்தில் அந்த பாடகர் நடித்திருந்தார். அப்பொழுது அந்த பாடகர் உடன் பழக்கம் ஏற்பட்டது. பிறகு அவரது மனைவியுடனும் பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தனுஷின் படப்பிடிப்பு தளத்தில் பாடகரின் மனைவி வருமளவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தனுஷின் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கும் அந்த பாடகியின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது . இதுபற்றி தனுஷிற்கு தெரிந்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்த தகவல் பாடகருக்கு தெரியவர குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. தனுஷிற்கு தகவல் தெரிந்தும் பாடகரிடம் சொல்லாதது அவருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாடகரும் அவரின் மனைவியும் விவாகரத்து வரை சென்றுள்ளனர். பாடகர் தனுஷுடனான பேச்சுவார்த்தையை தவிர்த்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் உங்கள் வதந்திக்கு ஒரு அளவே இல்லையா? என கூறி வருகின்றனர்.