Categories
உலக செய்திகள்

பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக… லீ ஜே யோங் தேர்வு…!!!!

தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகுத்து வருகிறது. இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ புயூங் பங் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் தலைமுறை நபராகும்.

லீ ஜே யோங் கடந்த 2012 ஆம் வருடம் முதல் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகின்றார். ஜே ஒய் லீ என அழைக்கப்படும் லீ ஜே யோங் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்திருந்தார் . இந்த நிலையில் தென்கொரியா அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |