Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி…. ரூ. 8 1/2 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்…. தம்பதியின் பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் சுரேஷ்- அனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதனை நம்பி அனிதா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி வேலை இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலையில் சேர்ந்தால் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும் எனவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பி கணவன் மனைவி இருவரும் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை பல்வேறு தவணையாக 8 லட்சத்து 56 ஆயிரத்து 115 ரூபாயை அனுப்பியுள்ளனர். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனையடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தம்பதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |