Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்…. இந்த செயல் மிருகத்தனமானது…. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர்…..!!!

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, அந்நாட்டு தலைநகரான கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகின்றது. இது குறித்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைன் மக்கள் மீது புதின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள் வலுப்படுத்துகின்றது. எங்களது கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம். போர்க்குற்றங்களுக்கு புதின் மற்றும் ரஷ்யாவை பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை வழங்குவோம்” இவ்வாறு ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |